ப்பா!! மின்னலே பட பாடலுடன் போட்டோஷூட்!! பார்க்க பளபளன்னு இருக்கும் வாணிபோஜன்!! வைரல் வீடியோ..

ப்பா!! மின்னலே பட பாடலுடன் போட்டோஷூட்!! பார்க்க பளபளன்னு இருக்கும் வாணிபோஜன்!! வைரல் வீடியோ..


Actress Vani Bohjan latest insta video goes viral

நடிகை வாணிபோஜன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன். தெய்வமகள் சீரியலில் சத்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இவர், தற்போது வெள்ளித்திரை பக்கம் தனது கவனத்தை செலுத்திவருகிறார்.

vani bojan

வெள்ளித்திரையில் இவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார் அம்மணி. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டும்வருகிறார்.

தற்போது மின்னலே பட பாடலுடன், போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.