சேலையில் தேவதைபோல் இருக்கும் தெய்வமகள் வாணிபோஜன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சேலையில் தேவதைபோல் இருக்கும் தெய்வமகள் வாணிபோஜன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


actress-vani-bhojan-diwali-special-instagram-photos-goe

நடிகை வாணிபோஜன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன். வாணிபோஜனை பார்ப்பதற்காக தெய்வமகள் சீரியல் பார்த்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

vani bojan

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தீபாவளி வாழ்த்து கூறி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. சேலை அணிந்து அழகு தேவதை போல் இருப்பதாக ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...