இப்படியெல்லாம் செய்யலாமா?? தண்டனை கொடுக்கணும்.! கடும் வருத்தத்தில் பொன்னி நாயகி.! ஏன்? என்னாச்சு??

சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடரான சிறகடிக்க ஆசை தொடரில் முத்து கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கும் வசந்த் வெற்றி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இன்ஸ்டாவில் புகைப்படங்கள்
திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களை வைஷ்ணவி அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பகிர்வார். இந்நிலையில் வைஷ்ணவிக்கு கடந்த வாரத்தில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது வெற்றி வசந்த் மனைவிக்காக கசாயம் போட்டு கொடுத்துள்ளார். இந்நிலையில் அதனை வைஷ்ணவி இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து, தன் கணவர் தனது அம்மாவை போல பார்த்து கொள்வதாக மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
ஆபாச விமர்சனங்கள், உருவ கேலி
இதற்கு சிலர் ஆபாசமாகவும், உருவகேலி செய்தும் கமெண்ட் செய்துள்ளனர். இதற்கு வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர்,
"மற்றவர்களை வாழ்த்த மனதில்லை என்றாலும் சிலர் எதற்காக இதுபோன்று வன்மத்தை கொட்டுகிறார்கள் என தெரியவில்லை. பிரபலங்கள் என்றால் அவர்களுக்கும் சந்தோஷங்கள், துக்கங்கள் இருக்கும்.அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது தவறான விஷயம் கிடையாது. அதைப் பார்த்து சிலர் ஆபாசமாக விமர்சனம் செய்வதை பார்க்க அருவருப்பாக உள்ளது. இதுபோன்று கமெண்ட் செய்பவர்களை தண்டிக்க வேண்டும்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அப்படியொரு அன்பு.! ஷெர்யர் மற்றும் யுகாவை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பாராட்டும் ரசிகர்கள்!!