சினிமா

சிவாஜி, எம்.ஜி.ஆர், கமலுக்கு ஜோடியாக நடித்த பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்! திரையுலம் இரங்கல்!

Summary:

Actress usharani dead

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்,  சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை உஷாராணி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பின்னர் நடிகை உஷாராணி மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்த சங்கரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு, கணவர் உயிரிழந்த நிலையில் அவர் அவரது மகன் விஷ்ணு சங்கருடன் சென்னை அய்யம்பாக்கத்தில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் நடிகை உஷாராணிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, கடந்த சில காலங்களாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் 62 வயது நிறைந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் நடிகை உஷா ராணியின் மரணத்திற்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


Advertisement