ப்பா.. கடல் பட துளசிதானா இது! இப்படி ஆள் அடையாளமே தெரியாம ஆகிட்டாரே! செம ஷாக்கான நெட்டிசன்கள்!!actress-thulasi-recent-photo-viral

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

அவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளான கார்த்திகா  தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அவர் தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு, வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ராதாவின் 2வது மகள் துளசி நாயர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து கடல் படத்தில் நடித்திருந்தார். பின்னர் ஜீவாவிற்கு ஜோடியாக யான் என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவர் பாதியிலேயே நிறுத்திய தனது படிப்பை தொடர சென்றார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ராதா தனது குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் கடல் படத்தில் நடித்த நடிகை துளசியா இது! இப்படி எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என ஷாக்காகியுள்ளனர்.