வாழையிலையில் இட்லி சாப்பிடும் அம்மன்!! யார் தெரியுதா?? அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..Actress Thamanna viral photos

அம்மன் வேடமணிந்து இட்லி சாப்பிடும் நடிகை தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் இவர் நாயகியாக நடித்துள்ள பல படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துவிட்டார் தம்மனா.

Thamanna

தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அம்மன் வேடமணிந்து, வாழையிலையில் அவர் இட்லி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அம்மன் வேடம் உங்களுக்கு கச்சிதமாக உள்ளது எனவும், அடுத்த படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Thamanna