சினிமா

அடேங்கப்பா!! ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?? சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்ஸி..

Summary:

தான் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருவதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளா

தான் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருவதால் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம் நடிகை டாப்ஸி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் டாப்ஸி. தமிழில் இவர் நடித்த ஆடுகளம் திரைப்படம் இவரை தமிழில் பெரியளவில் பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்திவருகிறார்.

ஹிந்தியில் இவர் நடித்த 6 படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக தற்போது டாப்சி உயர்ந்திருக்கிறார். ஆட்டம், பாட்டம், கவர்ச்சி என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் டாப்ஸி.

அடுத்ததாக இவரது நடிப்பில் ‘ரேஷ்மி ராக்கெட்.’ என்ற ஹிந்தி படம் வெளிவர இருக்கிறது. இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதைக்களத்தை கொண்டது.

இந்நிலையில் தனது தொடர் வெற்றியை அடுத்து, ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement