சொக்க வைக்கும் அழகில் கருப்பன் பட நடிகை தன்யா ரவிச்சந்திரன்! வைரல் புகைப்படம்...



Actress tanya ravichandran latest photo

நடிகை தன்யா ரவிச்சந்திரன் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

கருப்பன்  திரைப்படத்திற்கு முன்பே அவர் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

கறுப்பன் திரைப்படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை தன்யா. இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்ட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் தன்யாவை ரசிக்க ஆரம்பித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் அவரின் சில புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றனர். மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.