வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
நடிகை சுனைனா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா?
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, கன்னட படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.
அதன்பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்று அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்தார் சுனைனா. விஜய் நடித்த தெரி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார். தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், ஒருசில வெப் சீரிஸுலும் நடித்துவரும் நடிகை சுனைனா சமீபத்தில் வாயில் சுருட்டு, புகையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், கமெண்ட் செய்வதற்கு முன் இதை படித்திவிட்டு கமெண்ட் செய்யவும் எனவும் அவர் குறிப்பிட்டியிருந்தார்.
காரணம், அந்த புகைப்படம் ஒரு வெப் சீரிஸுக்கு எடுக்கப்பட்டது என்றும், இந்த புகைப்படம் படத்திற்காகத்தான் என்றும் அதில் சுனைனா பதிவிட்டிருந்தார். இதோ அந்த புகைப்படம்.