5 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் அசத்தலாக ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ரீதிவ்யா! அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா??

5 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் அசத்தலாக ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ரீதிவ்யா! அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா??



Actress sri divya re entry in malaiyala movie

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெரும் அளவில் பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது அழகும், நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா காக்கிச்சட்டை,ஜீவா, மருது, ஈட்டி என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பின்னர் நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது. ஏறக்குறைய ஐந்து வருடங்களாக அவர் சினிமாவில் இருந்து காணாமல் சென்று விட்டார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

sri divya

இந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா மீண்டும் மலையாள படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனகனமன படத்தில் பிருத்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் நேற்று வெளியான இந்தப் படம் தமிழிலும் வெளியாகவுள்ளதாம்.