சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட ஸ்ரீதிவ்யா.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் பாருங்க..

Summary:

நடிகை ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவரும் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தொடர்ந்து விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்த இவர் தற்போது புது முக நாயகிகளின் வருகையால் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார். பொதுவாக இவர் நடித்த பெரும்பாலான படங்களில் மிகவும் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

எப்போதும் மேக்கப்புடன் அழகு மங்கையாக வலம்வரும் இவர், முதல் முறையாக தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேக்கப் இல்லாமலும் அம்மணி செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்...


Advertisement