"விஜயகாந்த் மாதிரி ஆளு கூட நடிக்க மாட்டேன்" என்று கூறிய பிரபல நடிகை.? உண்மையை கூறிய பிரபலம்..

"விஜயகாந்த் மாதிரி ஆளு கூட நடிக்க மாட்டேன்" என்று கூறிய பிரபல நடிகை.? உண்மையை கூறிய பிரபலம்..


Actress soundarya wont act with vijayakandh

"பொன்னுமணி" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சௌந்தர்யா. தொடர்ந்து கமல், ரஜினி, விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். 

Vijayakandh

மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சௌந்தர்யா, "தவசி" படத்தில் விஜயகாந்துடன் நடித்திருந்தார். ஆனால் அந்தப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லாமல் மிகவும் பயந்து இருந்தாராம். அதற்கு காரணம் விஜய்காந்தை பற்றி அப்போது சிலர் தவறாக எழுதியது தான் என்று கூறினாராம்.

பின்னர் விஜயகாந்தே "என்னைப் பார்த்தல் அப்படியா தெரிகிறது?" என்று கேட்டு, இரண்டு நாட்கள் சும்மா வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு என்னை கவனிக்க சொல்லுங்கள். பிறகு விருப்பமிருந்தால் நடிக்கட்டும் என்று கூறினாராம்.

Vijayakandh

அதன்பிறகு, இரண்டு நாட்கள் வந்து பார்த்துவிட்டு, பிறகு இவரைப் போய் தவறாக நினைத்துவிட்டோமே என்று வருந்தி, பிறகு வந்து அந்தப்படத்தில் நடித்துக் கொடுத்தாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.