சினிமா

கவர்ச்சி நடிகை சோனா என்ன ஆனார்? படங்களில் நடிக்காதது ஏன்? புது தகவல்!

Summary:

Actress sona current status

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனா இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குசேலன் படத்தில் வடிவேலுக்கு மனைவியாக இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமான ஓன்று.

சினிமாவில் பிரபலமாக இருந்த இவர் சமீப காலமாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சோனா. அதில், சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நான் சினிமாவை விட்டு போகவில்லை, இந்த வருடம் நான்கு படங்களில் நடித்துளேன் என்றும், 12 படங்களை நிராகரித்துளேன் எனவும் கூறியுள்ளார். மேலும், முன்பை விட தற்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பதை நிறுத்தி விட்டேன், பணத்திற்காக ஓடுவதை நிறுத்திவிட்டு நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறேன் என கூறியுள்ளார் சோனா.


Advertisement