22 ஆண்டுகள் நிறைவு!! நெகிழ்ச்சியுடன் நடிகை சிம்ரன் வெளியிட்ட பதிவு! என்ன ஸ்பெஷல் தெரியுமா!!actress-simran-post-about-thullatha-manamum-thullum-mov

கடந்த 1999ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் மற்றும் ஹீரோயினாக சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் இத்திரைப்படத்தில் மணிவண்ணன், தாமு, தாடி பாலாஜி, டவுசர் பாண்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட் அடித்தது. மேலும் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ஏராளமான விருதுகளையும் பெற்றது. 

 இந்நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதுகுறித்து சிம்ரன் படத்தின் போஸ்டர் உடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் படம் குறித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும்  கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.