இந்தியா சினிமா

எனக்கும் எனது அப்பாவுக்கும் இது ஒரு போதும் ஒத்து போகாது!. உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி!.

Summary:

எனக்கும் எனது அப்பாவுக்கும் இது ஒரு போதும் ஒத்து போகாது!. உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி!.


அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவில் நடிகர் கமல்ஹாசனுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். விழா முடிந்த பின்னர் பேட்டியளித்த ஸ்ருதி, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவுக்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொருத்தவரை ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகி றேன். அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு நேரடியான பதிலில்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

அந்த விழாவில் சுதந்திர தின பேரணியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை கமல் அணிந்திருந்தார். பின்னர் அவர் வித்தியாசமான உடை ஒன்று அணிந்திருந்தார்.அந்த உடை சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
 
இந்நிலையில் அந்த வீடியோவில் கமல் ஹாஸன் என்ன உடை அணிந்திருக்கிறார் என்று தெரியவில்லை என நடிகை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். டியர் கமல் ஹாஸன், நியூயார்க் இந்திய சுதந்திர தின பேரணியில் நீங்கள் கிராண்ட் மார்ஷலாக இருந்த புகைப்படங்களை பார்த்தேன். பேரணியில் நீங்கள் வேட்டி அணிந்துள்ளீர்கள். (பெருமை). ஆனால் மற்றுமொரு உடை என்னவென்று தெரியவில்லை. வித்தியாசமாக இருக்கே என்று நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார். 


Advertisement