புடிடா.. புடிடா.. புல்லட் ஓட்டி குப்பற விழுந்து வாரிய பிரபல அஜித் பட நடிகை! தீயாய் பரவும் வீடியோ!!



actress shreddha srinath fall down while driving bullet

தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் காற்று வெளியிடை என்ற படத்தில் முக்கிய கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் விக்ரம் வேதா, தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சமீபத்தில் விஷாலின் சக்ரா படத்திலும் நடித்திருந்தார்.

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தென்னிந்திய சினிமாவுலகில் பிரபல நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவர் புல்லட் ஓட்டி கீழே விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை ஸ்ரத்தா, ராயல் என்பீல்டு பைக் ஓட்ட பயிற்சி எடுத்த போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதனை கண்ட நெட்டிசன்கள் அந்த வீடியோவை கோவில் படத்தில் வரும் புல்லட் பாண்டி வடிவேலு புகைப்படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.