"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல ரஜினி பட முன்னணி நடிகை! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!!
தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஷோபனா தமிழ் மட்டுமின்றி
மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் இறுதியாக போடா போடி மற்றும் கோச்சடையான் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷோபனா நடிகை மட்டுமின்றி புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் நடன பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ஷோபனாவிற்கு தற்போது ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்ட போதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. இவை அனைத்தும் முதல் நாளில் இருந்தது. பின்னர் படிபடியாக அவை குறையத்தொடங்கியது.
நான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதால் மகிழ்ச்சியடைகிறேன். அது வைரஸ் தொற்றிலிருந்து 85 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.