நடிகர் பார்த்திபனை பிரிந்தது ஏன்?? பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த நடிகை சீதா.! ஏன் தெரியுமா??

நடிகர் பார்த்திபனை பிரிந்தது ஏன்?? பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த நடிகை சீதா.! ஏன் தெரியுமா??


actress-seetha-explain-athe-reason-divorce-with-parthib

தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக திகழ்ந்தவர் நடிகை சீதா. இவர் நடிகர் பார்த்திபன் இயக்கி ஹீரோவாக நடித்த புதிய பாதை என்ற படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெறியேறி, கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தனர். மேலும், ஒரு மகனை தத்தெடுத்து வளர்ந்தனர். இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதை தொடர்ந்து நடிகை சீதா சீரியல் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் 2010 ஆம் ஆண்டு சதீஷ் என்ற டிவி நடிகரை இரண்டாவது திருமணம் செய்தார்.  அவரையும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

Seetha

இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து சீதா பேசியுள்ளார். அப்போது அவர், திருமணம் முடித்த பின்னர் என்னிடம் எதிர்பார்ப்புகள் மட்டுமே இருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பு கணவனிடம் இருந்து முழுதாக அன்பு கிடைக்க வேண்டும். எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான். இது கூட இல்லை என்றால் வாழ்க்கையில் என்ன  இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாததால்தான் விவாகரத்தை பெற்றேன் என்று சீதா கூறியுள்ளார்.