சினிமா

விஜய்யின் தங்கை நடிகையா இது! பல வருஷத்துக்கு பின் இப்படியொரு தரிசனமா? மெய்மறந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹீரோக்கள் அவ்வபோது வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதி

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹீரோக்கள் அவ்வபோது வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் எப்பொழுதும் நிலைத்திருப்பர். அந்த வகையில் சில படங்களிலேயே நடித்தாலும் சிறு பிள்ளை போல் வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சரண்யா மோகன். 

 தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து மகேஷ், சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம், ஒஸ்தி, அ ஆ இ ஈ, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு செட்டிலான அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில் சரண்யாமோகன் நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ராதே போல கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement