சினிமா

பிரபல நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது! எந்த நடிகைக்கு தெரியுமா?

Summary:

Actress saranya mohan blessed with baby girl

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதேபோல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார் சரண்யா.

அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோஹினி திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படமும் இவருக்கு பிரபலத்தை தேடி தந்தது.

ஆனால் அதன்பின்னர் சரண்யா எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுக்கியே இருந்தார். அதன்பின்னர் 2015ம் ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனாலும் நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் சில நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்தார்.

இந்நிலையில் நடிகை சரண்யா மோகனுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது. அதை சரண்யாவின் கணவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement