பிக் பாஸ்க்கே விபூதி அடித்த சௌந்தர்யா? மோசடி செய்து வெற்றிபெற முயற்சி - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு.!



actress-sanam-shetty-on-bigg-boss-tamil-8-voting-scam-b

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டி நாளையுடன் நிறைவுபெறுகிறது. போட்டியாளர்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா, ராயன் ஆகியோர் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராகவும், மற்றொருவர் இரண்டாவது வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்படுவார்கள். 

மிஸ்டுகால் வெற்றி

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் போட்டியாளர் சௌந்தர்யாவை வெற்றிபெறவைக்க மோசடி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க மிஸ்ட்டு கால் கொடுத்து வெற்றிபெற வைக்கலாம் என்ற முறையில், சௌந்தர்யாவின் இணையப்பக்கத்தில் சௌந்தர்யாவின் அலைபேசி எண் என பிக் பாஸ் வோட்டிங் நம்பரை இணைத்து வைத்துள்ளனர். 

இதையும் படிங்க: "பிடிக்கலைனா சொல்லிறனும்., அது பிரன்ஷிப் இல்ல" - விஷால் குறித்து கூறிய தர்ஷிகா.!!

மோசடி செயல் அரங்கேற்றம்?

 

அதேபோல, பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து காதலர் விஷ்ணு விஜயை அறிமுகம் செய்த சௌந்தர்யா, வெற்றியை நோக்கி பயணிக்கிறார். காதலியை வெற்றிபெற வைக்க வேண்டி விஷ்ணு விஜய் தனது பின்தொடர்பாளர்களுக்கு சௌந்தர்யாவின் வோட்டிங் நம்பரை பகிர்ந்து இருக்கிறார். இதனால் மக்களின் உணர்வை பயன்படுத்தி, அதனை தனக்கு சாதகமாக்கி, சௌந்தர்யாவை வெற்றிபெற முயற்சிகள் நடக்கிறது என சனம் செட்டி குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: காதலருக்காக ஓட்டு சேகரிக்கும் அர்ச்சனா?.. நேரம் பார்த்து நெருக்கமான வீடியோ வைரல்.! நெட்டிசன்ஸ் கேள்வி.!!