"பிடிக்கலைனா சொல்லிறனும்., அது பிரன்ஷிப் இல்ல" - விஷால் குறித்து கூறிய தர்ஷிகா.!!



Bigg boss 8 tamil today promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதியான பயணத்தில் விஜே விஷால், தர்ஷிகா, முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, ராயன் மேற்கொண்டுள்ளனர். பிற போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டு, மீண்டும் வீட்டிற்க்குள் வந்துள்ளனர். 

காதலா? நட்பா?

ஜாக்குலின் மட்டும் பணப்பெட்டி டாஸ்கில் தோல்வி அடைந்த காரணத்தால், அவர் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்நிலையில், விஜே விஷால் - தர்ஷிகா இடையே காதல் உறவு இருந்து வருவதுபோல பல காட்சிகள் முன்னதாக வெளியாகியதை தொடர்ந்து, பலரும் கேள்வி எழுப்ப, விஷால் நான் நட்பு ரீதியாக மட்டுமே பழகினேன் என்று அனைவரிடமும் தெரிவித்து விட்டார்.

இதையும் படிங்க: காதலருக்காக ஓட்டு சேகரிக்கும் அர்ச்சனா?.. நேரம் பார்த்து நெருக்கமான வீடியோ வைரல்.! நெட்டிசன்ஸ் கேள்வி.!!

வருத்தத்தில் தர்ஷிகா

இதனிடையே, தான் வீட்டில் இருந்து வெளியேறும்போது தர்ஷிகா விஷாலிடம் அம்மாவின் மோதிரத்தை கொடுத்திருந்த நிலையில், உன்னுடன் நான் நண்பனாக பழகுகிறேன் என விஷால் ஒதுங்கிய காரணத்தால், தர்ஷிகாவும் தனது மோதிரத்தை திரும்ப வாங்கிக்கொண்டார். மேலும், விஷால் - அன்ஷிதாவிடம் நெருக்கம் காண்பிக்க தொடங்கினார்.. 

தனியாக தவிக்கிறேன்

பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்த பின்னரும் அன்ஷிதாவிடம் விஜே விஷால் பேசி சிரிப்பதால், தர்ஷிகா அதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கிறார். இதுதொடர்பாக சௌந்தர்யாவிடம் அவர் மனம்விட்டு பேசுகிறார். என்னால் வீட்டில் பிறர் இருப்பதைப்போல மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிட்டு வந்துரணும். இல்லைனா அது நம்பிக்கை கொடுக்குற மாதிரி தானே. நீ இந்த வீட்டுல எனக்கு ரொம்ப ஸ்பேஷல்னு சொல்லிருக்க. வார்த்தையால் கூறவில்லை என்றாலும் செயலின் மூலம் உணர்ந்ததால் தான் நான் இன்று இப்படியொரு நிலையில் உள்ளேன். உண்மையில் அந்த ரிலேஷன்ஷிப் பிரென்ஷிப் இல்லை என சௌந்தர்யாவிடம் வருத்தத்தை தெரிவிக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், கவனமாக பேசும் தன்மை கொண்ட விஷால், தனது நயவஞ்சக எண்ணத்தில் செயல்படுவதாகவும் விமர்சனம் நெட்டிசன்களால் முன்வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: "இருவரும் உண்மையா இல்ல, ரொம்ப வீக்" - சுனிதாவால் கதறியழுத சௌந்தர்யா, ஜாக்குலின்.!