சினிமா

கொரோனா அச்சுறுத்தல்: நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா வெளியிட்ட நடன வீடியோ! குவியும் லைக்குகள்.!

Summary:

Actress Saayessha dance video

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் சாயிஷா ஆடிய நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து நடிகை சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார். அந்த சமயம் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்த படியே டிக்டாக், நடனம் மற்றும் சமையல் போன்ற செயல்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர். 


Advertisement