திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....



actress-saai-pallavi-dance-video

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.  இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய ஹோம்லி லுக்கிலே ரசிகர்களை கவர்ந்து மேலும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தன்டேல் திரைப்படமும் ரசிகர்களின் பாராடுக்களை பெற்றது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு குட் நியூஸ்... நடிகை சாய் பல்லவியின் தண்டேல் படத்தின் ஓடிடி ரிலீஸ்.... எப்போது தெரியுமா?

இந்நிலையில் சாய் பல்லவியின் உறவினர் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவி குடும்பத்தினர் உடன் கலகலவென கலக்கல் டான்ஸ் ஆடி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.....

இதையும் படிங்க: அப்பாவை போல உருவத்தில் அப்படியே இருக்கும் நடிகர் பிரபுதேவா மகன்! இணையத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ..