புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாவ்.. கியூட்ல.! பாக்கியலட்சுமி நடிகை தனது மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீங்களா.! மறவாத பாசம்!!
விஜய் டிவியில் ராஜாராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் தற்போதும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
ரித்திகா குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் திடீரென பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து அவர் சட்டம் என் கையில் படத்தில் நடித்துள்ளார்.
ரித்திகாவுக்கு வினு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரித்திகா அண்மையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: முதன்முறையாக தனது மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை.! லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்.!!
இந்நிலையில் நடிகை ரித்திகாவின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு நிலா என பெயர் வைத்துள்ளனர். ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பார். தொடரில் அந்த குழந்தையின் பெயரும் நிலா. அதனை மறவாது மகளுக்கு நிலா என பெயர் வைத்திருப்பதை ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக தனது மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை.! லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்.!!