
தம்பியுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ரித்திகா... குவியும் வாழ்த்துக்கள்...
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா. அதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சீரியலை தாண்டி குக் வித் கோமாளி சீசன் 2, நிகழ்ச்சியில் கலந்து கெண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் தற்போது தனது தம்பியுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது நடிகை ரித்திகா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement