அடேங்கப்பா.. பிகில் பட நடிகைக்கு இப்படியொரு திறமையா! வீடியோவை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

அடேங்கப்பா.. பிகில் பட நடிகைக்கு இப்படியொரு திறமையா! வீடியோவை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!


actress-reba-monicka-singing-video-viral

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரெபா மோனிகா  தமிழில் எப்ஐஆர், மழையில் நனைகிறேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கன்னட மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ரெபா மோனிகா பிக்பாஸ் அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். இது பெருமளவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் செம ரீச்சானது.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரெபா மோனிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்  மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடியிருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை ரெபா மோனிகாவிற்கு இப்படியொரு திறமையா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.