வேற லெவல் தான்... தளபதி 66 ஹீரோயினி ராஷ்மிகாவுக்கு அடித்த இன்னொரு ஜாக்பாட்....! என்னனு பார்த்தீங்களா...



actress-rashmika-mandanna-act-with-actor-prabhas

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி 66 படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்குகிறார்.

கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார் நடிகை  ராஸ்மிகா. இந்த படம் மட்டுமின்றி ஹிந்தியில்  அபிதாப் பச்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இந்நிலையில், தளபதி விஜய்யை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ளாராம் ராஷ்மிகா. நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கவுள்ள ஸ்பிரிட் எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது . பிரபாஸ் தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.