மாணவர்களை அவதூறாக பேசி, தாக்கிய விவகாரத்தில் நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமின்; கைதான அன்றே ரிலீஸ்.!

மாணவர்களை அவதூறாக பேசி, தாக்கிய விவகாரத்தில் நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமின்; கைதான அன்றே ரிலீஸ்.!


Actress Ranjana Nachiyar Get Bail With Condition 

 

போரூர் - குன்றத்தூர் சாலையில் சென்ற அரசுப்பேருந்தில், தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் மற்றும் அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதி வழங்கிய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரை நடிகை ரஞ்சனா நாச்சியார் கடுமையாக வசைபாடினார். 

படிக்கட்டில் இருந்து கீழே இறங்காத மாணவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்த நடிகை, அவர்களை தாக்கி கீழே இறக்கிவிட்டார். இதுகுறித்த விடியோவை அவரின் சமூக வலைதளத்தபக்கத்தில் பகிரவும் செய்தார். இதனையடுத்து, அவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். 

ஆனால், அவரின் செய்கைகள் கண்டனத்தை சந்தித்து, காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, மாங்காடு காவல் நிலையத்தில் வரும் 40 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தை கையில் எடுத்தோர் உடனடி ரிலீஸ் செய்யப்படுவதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இருப்பினும் மாணவர்களை தாக்கியது, நடத்துனரையும் - மாணவர்களையும் அவமரியாதையாக பேசியது கண்டிக்கத்தக்கது தான். நடிகை பாஜக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.