உண்ணாவிரதத்தை முடிக்க, நடிகர் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்த இந்த பாப்பா யார் தெரியுமா? பல ஆண்டுக்குப் பின் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!!

உண்ணாவிரதத்தை முடிக்க, நடிகர் ரஜினிக்கு ஜூஸ் கொடுத்த இந்த பாப்பா யார் தெரியுமா? பல ஆண்டுக்குப் பின் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!!


actress-raka-shared-her-daughter-gave-juice-to-rajini-p

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவேரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது உண்ணாவிரத்தில் குடிக்க குழந்தை ஒன்று ஜூஸ் கொடுத்தது. அதனை அருந்திய ரஜினி அந்த ஜூஸை மீண்டும் குழந்தைக்கு கொடுப்பார்.

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகாவின் மகளாவார். ரேகா கடலோர கவிதைகள் படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் புன்னகை மன்னன் படத்தின் மூலம்  மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவர் தற்போதும் பல படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ரேகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிக்கு தன் மகள் ஜூஸ் கொடுத்த புகைப்படத்தை தற்போது  பகிர்ந்த அவர், இந்த சிறப்பான தருணத்தை என்னுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு ரஜினிபீல்டு 2K கிட்ஸ்க்கு நன்றி என  பதிவிட்டுள்ளார். மேலும் அவர் 9 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ரஜினி உண்ணாவிரதத்தை முடித்து ஜூஸ் கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபராகவும், நல்ல காரியத்தின் ஒரு பகுதியாகவும் எனது மகள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார் என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

rekha