சினிமா

படப்பிடிப்பில் குடித்துவிட்டு போதையில் இருந்த பிரபல நடிகை! யார் தெரியுமா?

Summary:

Actress priyanga jawalkar drunk in shooting spot

படத்தில் காட்சிகள் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தங்களது உடலை வருத்தி அதற்கேற்றாற்போல் நடிக்க பல நடிகர்கள் முயற்சித்தது உண்டு. அதற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் நடிகர் விக்ரம். படத்தின் கதைக்காக தன்னால் முடிந்தவரை தனது உடலை வருத்தி சிரமப்படுவார்.

சில சமயங்களில் நடிகைகளும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. நடிகை பிரியங்கா ஜவால்கர் ‘டேக்ஸி வாலா’ என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்தப் படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ப்ரியங்கா பகிர்ந்துள்ளார்.  ‘‘இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு காட்சிக்காக அவர் நிஜமாகவே குடித்தாகவும், அதிலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே குடித்துவிட்டு போதையை படப்பிடிப்பு முடியும் வரை தாக்கு பிடிக்க வேண்டும். அதோடு சிரிக்கவும் வேண்டுமாம். இதற்காக நான் ஒருநாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டேன்’’ என்றார் நடிகை பிரியங்கா ஜவால்கர். 


Advertisement