அட.. நியூ லுக்.! அந்த புதிய தொடரில் மாஸ் ரோலில் களமிறங்கிய காற்றுக்கென்ன வேலி நாயகி.! கியூட் வீடியோ!!

அட.. நியூ லுக்.! அந்த புதிய தொடரில் மாஸ் ரோலில் களமிறங்கிய காற்றுக்கென்ன வேலி நாயகி.! கியூட் வீடியோ!!



actress-priyanga-entry-in-kanaa-kanum-kalangal-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வாறு மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி. கல்லூரி கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான  ரசிகர்கள் உள்ளனர். 

படிப்பு ,குடும்பம், காதல் என எமோஷனலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இளமையான கல்லூரி ஆசிரியராக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் மற்றும் கல்லூரி மாணவியாக, ஹீரோயின் கதாபாத்திரத்தில் பிரியங்கா ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடர் தற்போது சற்று டல் அடிப்பதாக ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.

காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு நீங்கா இடம்பிடித்தவர் பிரியங்கா. அவர் தற்போது புதிய தொடரில் சூப்பரான ரோலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது பிரியங்கா கனா காணும் காலங்கள் சீசன் 2 தொடரில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அவர் என்ட்ரி கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.