சினிமா

நடிகை பிரியாமணியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில்.

Summary:

Actress priyamani current status

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடம் பருத்தி வீரன். கிராமத்து கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக நடித்தவர்தான் நடிகை  பிரியாமணி. பருத்திவீரன் படம் மூலம் கிடைத்தை வரவேற்பை அடுத்து பலவேறு படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் சாருலதா என்ற படத்தில் நடித்திருந்தார்.

2012ல் வந்த இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் பிரியாமணி. Dr 56 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார். இது கன்னடத்திலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இந்த படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். தொடர் கொலைகள், புலனாய்வு செய்யும் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.


Advertisement