பாக்கவே பளபளன்னு இருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர்! இணையத்தில் மாஸ் காட்டும் புகைப்படங்கள்...
பிரியா பவானிசங்கரின் கெத்து காட்டும் புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பெண்ணாகவும் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜீன் மற்றும் வெள்ளை ஷர்ட்டில் மாஸ் காட்டும் புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.