ஆதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்..! படத்தின் பெயர் அறிவிப்பு...!
இயக்குனர் அனுராக் காஷ்யப் இலாயக்கத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கண்னா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய 'இமைக்கா நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக பூமராங் என்ற படம் இயக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் அதர்வா, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தை டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் படம் `குருதி ஆட்டம்'. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா செயல்படுகிறார்.
இந்நிலையில், சின்னத்திரையில் இருந்து ‘மேயாத மான்’ மற்றும் கடைக்குட்டி சிங்கம் மூலம் பெரிய திரையில் பிரபலமான பிரியா பவானிசங்கர், ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா ஜோடியாக நடிகையுள்ளார்.
இப்படம் அதர்வாவின் முழு திறமையை வெளிப்படுத்தும் படமாக அமையும் என்று இயக்குநர் கூறியுள்ளார். எனவே ஆதரவா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.