சினிமா

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த நடிகை பிரணிதா! மாப்பிள்ளை யார்னு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் படத்தில் நடித்ததன்

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. அதனைத் தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சகுனி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து நடிகை பிரணிதா சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்ற மாசிலாமணி படத்தில் அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இறுதியாக அவர் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரணிதாவிற்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனாலும் கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை பிரணிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு  தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் எதுவும் தெரிவிக்காத நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் வெளியிட்ட பிரணிதாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement