அம்மாவானார் தளபதியின் சச்சின் பட நடிகை.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!

அம்மாவானார் தளபதியின் சச்சின் பட நடிகை.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!


Actress pibhasha bhasu blessed with girl baby

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு. இவர் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார்.

பிபாஷா பாசுவுக்கு அலோன் என்ற திரைப்படத்தில் நடித்த போது கரன்சிங் குரோவர் உடன் காதல் மலர்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் இணைந்து 'டேஞ்சரஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

Bibhasa basu

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து கர்ப்பகால புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று நடிகை பிபாசா பாசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அந்த ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.