பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி பவித்ரா! அடேங்கப்பா.. கூட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி க


actress pavithralakshmi birthday video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் இதற்கு முன்பு நடன ரியாலிட்டி ஷோவான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

 மேலும்  பவித்ரா சில குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ராவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இந்நிலையில் பவித்ரா சமீபத்தில் தனது பிறந்தநாளை  குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ், ஷிவாங்கி, சரத் மற்றும் செஃப் தாமு மாஸ்டர் உள்ளிட்டோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.  தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.