ஓட்டுப்போட விஜய் சைக்கிளில் சென்றதுபற்றி ஓவியா என்ன சொல்லியுள்ளார் பாருங்க!! வைரல் ட்விட்..actress-oviya-twit-about-vijay-went-to-cast-vote-by-cyc

நடிகர் விஜய் ஓட்டுப்போட சைக்கிளில் சென்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகை ஓவியா.

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

vijay

இதில் சற்று  வித்தியாசமான, தனது வாக்கினை செலுத்துவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, அருகே இருக்கும் வாக்கு சாவடி மையத்திற்கு சைக்கிளிலையே சென்றார் நடிகர் விஜய். வாக்களிப்பதற்காக விஜய் சைக்கிளில் சென்ற வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதேநேரம் விஜய் சைக்கிள் சென்றது குறித்து சில விவாதங்களும் கூட நடந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல நடிகை ஓவியா, "ஆகா! நன்று; மிக நன்று! (BRAVO) என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.