"நீங்க வரலைனா உங்க அம்மாவை வர சொல்லுங்க" அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை அதிர்ச்சி தகவல்.?

"நீங்க வரலைனா உங்க அம்மாவை வர சொல்லுங்க" அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை அதிர்ச்சி தகவல்.?


Actress openup about adjustment

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான "செந்தூரப் பூவே" சீரியலில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் "தெய்வம் தந்த பூவே" சீரியலில் நடித்து வருகிறார்.

 Vijaytv

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று உள்ளார் ஸ்ரீநிதி. தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" சீரியலில் நடித்து வருகிறார் ஸ்ரீநிதி. ஒரு மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர், பல்வேறு போட்டோஷூட்கள் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான தகவலைக் கூறியுள்ளார். அந்த பேட்டியில் ஸ்ரீநிதி கூறியதாவது, " நான் மிகவும் சிறு வயதிலேயே, அதாவது பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்தேன்.

Vijaytv

அப்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கும்போது, ஒரு பிரபலத்துடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக் கேட்டனர். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்குத் தெரியாது. "நீ இல்லையென்றால் உன் அம்மாவை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு வரச் சொல்" என்று கூறியதாக ஸ்ரீநிதி அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.