சினிமா

சிம்பிளான உடையில் பார்க்க சிக்குன்னு இருக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரலாகும் புகைப்படம்

Summary:

நடிகை நிவேதா பெத்துராஜ் தீபாளி கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகை நிவேதா பெத்துராஜ் தீபாளி கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதை  தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடனும் ஒருபடம் என தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து படத்தில் உள்ள "அடியே அடியே அழகே  அடியே "பாடலில் உள்ள அவரது நடிப்பு  ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல்  தெலுங்கிலும் நடித்து  வருகிறார்.தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில்  அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சுடிதார் அணிந்து துப்பட்டா போட்டு  கிராமத்து பெண் போன்ற அழகிய தோற்றத்தில் புகைப்படம்  ஒன்றை   வெளியிட்டுள்ளார்.

மேலும் கவர்ச்சியை அதிகம் காட்டாத நடிகைகளில் ஒருவர் எனகூட நிவேதா பெத்துராஜ்  சொல்லலாம். தனது இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படத்தில்  எளிமையான உடை அணிந்தாலும் ரசிகர்கள் மனதில்சிக்குனு இடம் பிடிக்கும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிடுபவர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement