சினிமா

சினிமா படப்பிடிப்பு ரத்து..! தற்காலிகமாக கால் சென்டர் வேலையில் சேர்ந்த பிரபல நடிகை.! குவியும் வாழ்த்துக்கள்.

Summary:

Actress nikhila vimal joined in call center job

சசிகுமார் நடித்த வெற்றிவேல் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். வெற்றிவேல் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கிடாரி என்ற படத்தில் நடித்திருந்தார் நிகிலா விமல். அதனை அடுத்து கார்த்தியின் தம்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா காரணமாக அனைத்து வேலைகளும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு சேவையாற்ற கால் சென்டர் பணியில் சேர்ந்துள்ளார் நிகிலா விமல். கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மேலும், மக்களுக்கு உதவும் வகையில் கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதில், அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு சீராக கிடைக்கும் வண்ணம் கால் சென்டர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்படுகிறது. இந்த பணிக்காக வேலைக்கு ஆட்கள் தேவை என அரசு விளம்பரம் கொடுத்திருந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த நிகிலா விமல் மக்களுக்கு உதவி செய்ய இந்த வேலையில் சேர்ந்துள்ளார்.

இந்த செய்தி மலையாள ஊடகங்களில் தீயாக பரவியது. இதனை அறிந்த மக்கள் நிகிலாவின் செயலை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.


Advertisement