அட.. அந்த மனுஷனா! சிம்பு குறித்து பிரபல இளம்நடிகை என்னா சொல்லியுள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் பதிவு!!

அட.. அந்த மனுஷனா! சிம்பு குறித்து பிரபல இளம்நடிகை என்னா சொல்லியுள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் பதிவு!!


actress-nidhi-agarwal-tweet-about-simbu

பாலிவுட் சினிமாவில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் 2021 ஆம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நடிகை நிதி அகர்வால் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஒரு சில படங்களிலேயே நடித்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. மேலும் சென்னையில் ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளனர்.

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் அண்மையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் சிம்பு குறித்து கேட்ட நிலையில் அவர் அதற்கு, தங்கமான மனசு கொண்ட மனிதன் என பதிலளித்துள்ளார்.
மேலும் விஜய் குறித்து கேட்டதற்கு மாஸ்டர் என்று கூறியுள்ளார்.