சினிமா

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை! கொண்டாட்டத்தில் குடும்பத்தார்கள்!! என்ன விஷயம் தெரியுமா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் தற்போது சந்தேகப் பேயான கணவரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நீபா.

பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரான அவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னரானார். அதனைத் தொடர்ந்து நீபா ரோஜாகூட்டம், பொம்முக்குட்டி அம்மாவுக்கு என ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் காவலன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நீபா தற்போது புதிய ஸ்வான்கி காரை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த தகவலை அவர் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement