அடேங்கப்பா.. பகத் பாசிலுக்கு நஸ்ரியா கொடுத்த சூப்பர் கிப்ட்..! வேறலெவல் சர்ப்ரைஸ் தான்..!!

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிய "நேரம்" திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நஸ்ரியா. இவர் அடுத்ததாக "ராஜா ராணி" படத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் "கையேதும் தூரத்" என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் பகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2014-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று பகத் பாசிலுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகத் பாசிலுடன் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.