எம்.பியான கருணாஸ் பட நடிகைக்கு கொரோனா உறுதி! தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை!
எம்.பியான கருணாஸ் பட நடிகைக்கு கொரோனா உறுதி! தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நவ்னீத் கௌர். இவர் தமிழில் அரசாங்கம் மற்றும் கருணாஸ் நடிப்பில் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மாராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
மேலும் மகாராஷ்டிராவின் அமராவதியில் தனது கணவரின் யுவ ஸ்வபிமானி பக்ஷா கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்பியுமானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவ்னீத்தின் மாமானாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குடும்பத்தில் உள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அப்பொழுது நவ்னீத்திற்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. ஆனால் மீண்டும் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் நவ்னீத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.