சினிமா

30 வருடத்திற்கு முன் குஷ்பு தன் இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.? அட..! அவரா இது..?

Summary:

Actress nancy Jenifer childhood photo

நடிகை குஷ்பு தனது கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தை ஒன்றின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த இருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்பம், அரசியல் என செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கரை என்ற படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் அவரது இடுப்பில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பார். அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. நான்தான் என கூறியுள்ளார் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்ஸி ஜெனிபர்.

தற்போது சினிமாவில் கலக்கிவரும் இவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement