சினிமா

இதற்காகதான் வேண்டினேன்.. 41 வயதில் செம குட் நியூஸ் சொன்ன நடிகை நமீதா! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

இதற்காகதான் வேண்டினேன்.. 41 வயதில் செம குட் நியூஸ் சொன்ன நடிகை நமீதா! குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் அஜித், விஜய், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில்  நடித்துள்ளார். மேலும் நடிகை  நமீதா பல படங்களில் தனது அளவில்லா கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார்.

அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த நிலையில் உடல் எடை கூடி படவாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இந்த நிலையில் 41 வயது நிறைந்த நமீதா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. நான் விரும்பியதெல்லாம் உன்னைதான். உனக்காக இவ்வளவு நாள் வேண்டிகொண்டிருந்தேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகளை என்னால் உணர முடிகிறது. இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 


Advertisement