பிரபல நடிகையை பொண்ணு கேட்டு செம்ம அடிவாங்கிய ராமராஜன்.. இவ்வளவு தெய்வீக காதலா?..! இறுதியில் நடிகைக்கு வந்த காதல்..!!

பிரபல நடிகையை பொண்ணு கேட்டு செம்ம அடிவாங்கிய ராமராஜன்.. இவ்வளவு தெய்வீக காதலா?..! இறுதியில் நடிகைக்கு வந்த காதல்..!!


Actress nalini speech about actor ramarajan

தமிழ் திரையுலகில் மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் ராமராஜன், 90களில் ரஜினி, கமல் உட்பட பல நடிகர்களுக்கு போட்டிபோட்டு நடித்து வந்தார். 

இவர் கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்த வந்த ராமராஜன், அதிமுக பற்றாளரும் ஆவார். இவரது கரகாட்டக்காரன் திரைப்படம் இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. 

actress nalini

பல இயக்குனர்களை அறிமுகம் செய்த ராமராஜன், நடிகை நளினியை காதலித்து வந்தார். இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், மகன்-மகள் இருக்கின்றனர். 

இதற்கிடையில் ஜோசியரின் பேச்சைக் கேட்டு திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட திரைப்பட சரிவை சரி செய்ய மனைவியை விவாகரத்து செய்த ராமராஜன் இறுதியில் தனிமையில் தவிக்கும் நிலைக்கே தள்ளப்பட்டார். 

தனது வாழ்க்கை குறித்து நளினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், "அவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்து வந்தேன். என்னிடம் அவர் காதலை தெரிவித்தபோது, நான் மறுத்தேன். 

actress nalini

ராமராஜன் என்னை காதலிப்பது தெரிந்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அதன்பின் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். இதற்கிடையில், நான் சென்னை வந்த தகவலை அறிந்து அவர் நேரில் வந்தார்.

இனி நான் கதாநாயகனாக நடிக்கப்போகிறேன் என்று உங்கள் வீட்டாரிடம் சொல். நமது திருமணம் விரைவில் நடக்கும் என கூறினார். அவர் வந்த தகவலை அறிந்த எனது குடும்பத்தினர் அவரை தாக்கினார்கள். நான் அவர்களிடம் சண்டையிட்டு அவரையே திருமணம் செய்வேன் என கூறினேன்" என தெரிவித்தார்.