அடஅட.. அம்மாவைப் போலவே பேரழகு! தேவதையாய் ஜொலிக்கும் மீனாவின் மகள்! கண்ணுப்பட வைக்கும் புகைப்படங்கள்!!

அடஅட.. அம்மாவைப் போலவே பேரழகு! தேவதையாய் ஜொலிக்கும் மீனாவின் மகள்! கண்ணுப்பட வைக்கும் புகைப்படங்கள்!!


Actress meena with Nainika photoshoot viral

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. இவர் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி,கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

மேலும் 90ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த அவர் திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். நடிகை மீனாவின் மகள் நைனிகா. அவர் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பலரையும் கவர்ந்தார்.

meena

நைனிகா தற்போது நன்கு வளர்ந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனா  தனது மகளுடன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் அம்மாவைப் போலவே பேரழகு என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

meenameenameena